நடிகர் சரத்பாபு மறைந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்400 படங்கள் வரை நடித்துள்ள இவர் தமிழில் இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சரத்பாபு. அப்படத்திற்கு பிறகு முத்து, அண்ணாமலை போன்ற ரஜினியின் முக்கியமான படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.. சரத்பாபு செப்சிஸ் நோயின் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமா மக்கள் மறைந்த நடிகர் சரத்பாபுவை பற்றி அதிகம் பேசி வருகிறார்கள்.
72வயதாகும் நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவு காரணமாக மே22ம் தேதி உயிரிழந்தார். ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டது, இங்கே தகனம் செய்யப்பட்டது..சரத்பாபு அவர்கள் முதலில் ரமா பிரபா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிய ,தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக எம்.என்.நம்பியாவின் மகளான சினேகாவை மறுமணம்
செய்தார், ஆனால்2011ம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்..அவர்களின் வாழ்க்கையும் பாதியில் முடிந்தது.இவரது மறைவிற்கு பிறகு சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளியாக, “அட நம்பியாரின் மருமகனா இவர்” என ரசிகர்கள் புதிய செய்தியாக பார்க்கிறார்கள்.
0
Leave a Reply