அதானி குழும நிறுவனங்கள் பங்குச் சந்தையில் ஏறுமுகம்
கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நான்கு அதானி குழும நிறுவனங்களின் கண்ணோட்டத்தை 'நெகட்டிவ்' என்பதில் இருந்து'ஸ்டேபிள்' ஆக உயர்த்தியுள்ளதுமூடிஸ்கடன் மதிப்பீட்டு நிறுவனம் . மூடிஸ் அமைப்பு தற்போது அதன் மதிப்பீட்டை உயர்த்த முக்கியமான காரணமாக கூறுவது சரியான நேரத்தில் வாங்கிய கடனுக்கு தவணைகளை திருப்பி செலுத்தியது, புதிய முதலீடுகளை ஈர்க்கும் திறன் கொண்டு இருப்பதை வைத்து மதிப்பீட்டைStable ஆக உயர்த்தியுள்ளது.அதானி கிரீன் எனர்ஜி, அதானி க்ரீன் எனர்ஜி ரெஸ்டிரிக்டட் குரூப்1, அதானி- டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி ஆகியவற்றுக்கான மதிப்பீடுகள் திருத்தப்பட்டுள்ளன என்று மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீசஸ் அறிக்கை தெரிவித்துள்ளது. மற்ற எட்டு அதானி குழும நிறுவனங்களுக்கான மதிப்பீடுகள்'stable' என்பதில் இருந்து மாறாமல் உள்ளது.
அதானி குழுமம் நிதி வலிமையையும், நிதி திரட்டும் திறனையும்நிரூபித்துள்ளதாகவும், கடந்த ஆண்டில் பல கடன் பரிவர்த்தனைகளை முடித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழும பங்குகளின் விலையும், கௌதம் அதானி சொத்து மதிப்பும் தொடர்ந்து உயர்ந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு சாதகமாக உள்ளது.அதானி குழுமம் கடனை அடைத்தது மட்டும் அல்லாமல்GOG மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் போன்ற முக்கிய முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டை பெற்றள்ளது மூலம் பங்குச் சந்தையில் அதன் வலிமையை காட்டியுள்ளது என மூடிஸ் நிறுவன அறிக்கை கூறுகிறது.கடன் மதிப்பீடு என்பது ஒரு நிறுவனத்தின் நிதிக் கடமைகளை நிறைவேற்றும் திறனைக் குறிக்கிறது மற்றும் அத்தகைய மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றம் நடந்தால் பங்கு விலை அதிகளவில் பாதிக்கிறது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் தனிநபர்களுக்கு இருக்கும் சிபில் ஸ்கோர் போல நிறுவனங்களுக்கு கிரெடிட் ரேட்டிங் அளிக்கப்படுகிறது.
0
Leave a Reply