அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை அடுத்து சினிமா பிரபலங்கள் வருகை
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தைப்பூசத் திருவிழா10 நாள்களுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் தைப்பூச விழா என்பதால் பக்தர்களின் வருகை வழக்கத்துக்கும் மாறாக அதிகமாக இருந்தது.
தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் கோயில் விழாவுக்குத் தேவையான நன்கொடை வழங்கி கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச விழாவில்கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை அடுத்து சினிமா பிரபலங்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.நடிகர்கள் சந்தானம், கெளதம் கார்த்திக், விதார்த், பாக்யராஜ், பூர்ணிமா, கூல் சுரேஷ், சமந்தா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நடிகை சமந்தா,பழநிக்கு வருகை தந்து படிப்பாதை வழியாக 600 படிகளில் சூடம் ஏற்றி மலைக்கோயில் வழிபாடு செய்தார். அவருடன்96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் சமந்தாவின் உறவினர்கள் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சம்ந்தா, உடல்நலக் குறைவால் பாதிக்கபட்டு, தற்போது கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடும் மீண்டு வந்ததாகவும் மேலும் முழுமையாக உடல் நலம் பெற வேண்டி வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகப் பழநிக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாகவும் தெரிவித்தார்.
0
Leave a Reply