பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவிக்கு, வரிசையாக திரைப்படங்களில் வாய்ப்பு
.தனி ஒருவன்- ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா கூட்டணியில் மீண்டும் ஜெயம் ரவி தற்போது இணைந்துள்ளார்.2015 இல் வெளியான தனி ஒருவன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு, பிறகு அதன் தொடர்ச்சியாக தனி ஒருவன் 2 திரைப்படம் தற்போது எடுக்கப் போவதாக அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.
ஜன கன மன: வானம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் அகமது. இவர் என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜெயம் ரவியுடன் இணைந்து ஜனகனமன திரைப்படத்தையும் தொடங்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டு தொடங்கியது, அதன் பிறகு பாதியிலேயே லாக்டவுன் காரணமாக நின்றது. இந்நிலையில் படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். இதில் ஜெயம் ரவியுடன் டாப்ஸி, அர்ஜுன், எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
..ஜே ஆர்30: ராஜேஷ் இயக்கத்தில் ரவி தன்னுடைய30 ஆவது படத்தில் நடிக்கிறார்.பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். வி டிவி கணேஷ், நடராஜன் சுப்பிரமணியன், ஐயோ ரமேஷ் போன்றோர் இணைந்து நடித்து உள்ளனர். கூடிய விரைவில் திரைப்படம் வெளிவர போகிறது என்று அப்டேட் அளித்துள்ளனர் பட குழுவினர்.
இறைவன்: அகமத் இயக்கத்தில் உருவாகும் இறைவன் திரைப்படத்திலும் ரவி நடிக்கின்றார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஜீனி: அடுத்ததாக புவனேஷ் இயக்கத்தில் ஜீனி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு மொத்தமாகவே மூன்று வாரங்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறாம். இதில் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷேன், ஓமிகா கேபி போன்ற மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரங்களாக நடக்கின்றனர்களாம். திரைப்படம் பான் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யும் அளவிற்கு உருவாக்கப்படுகிறது, இதில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
சைரன்: ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ரிவர்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது சைரன் இதில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு, சமுத்திரக்கனி போன்றோர நடித்துள்ளனர்.. ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
0
Leave a Reply