இராஜபாளையம் ஊருணிகளில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இராஜபாளையம் நகராட்சி சுற்றியுள்ள கிராமங்களில் 50 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள் உள்ளன. நகரை ஒட்டிய பெரிய கண்மாய்களான புளியங்குளம், பிரண்டைகுளம், கொண்டநேரி, பெரியாதிகுளம், கடம்பன்குளம் உள்ளிட்ட கண்மாய்கள் முழு அளவிலும் சிறிய அளவிலான ஊருணிகள் ஆகாய தாமரை முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.இதனால் பறந்து விரிந்த கண்மாயின் தண்ணீரை வெளியே தெரியாதபடி மறைத்து பசுமை போர்த்தியது போல் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. இதனால் கண்மாயில் வளரும் மீன்கள் உள்ளிட்ட உயிர்கள் வாழ்வதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் கொசுப்புழு உற்பத்தி கேந்திரமாக மாறி விடுகிறது.
தண்ணீரும் விரைவில் ஆவியாவதுடன் கண்மாயின் நீர் பிடிப்பு பகுதிகளை ஆகாய தாமரையின் கிழங்குகள் அடைத்துக் கொண்டு தண்ணீர் தேங்க முடியாமல் செய்கிறது. மேலும் மடைகளில் தண்ணீர் வெளியேற சிக்கல் உண்டாகிறது. இதே நிலை தொடர்ந்தால் அனைத்து நீர் நிலைகளுக்கும் ஆகாய தாமரை பரவி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். சாகுபடிக்கு தடை ஏற்படுத்தும் ஆகாய தாமரையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தகுந்த முன்னெடுப்பு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply