ஏஜ.. தொழில்நுட்பத்தில் பவதாரிணி குரல்'
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தி கோட்'. "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன் படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் வெளியிட்ட பதிவில், "இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல் நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என,நானும், வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அவர் இறந்த செய்தி வந்தது.அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி "என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
0
Leave a Reply