25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


பாசிப் பயறு தண்ணிக் குழம்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப் பயறு தண்ணிக் குழம்பு

தேவையானவை- :தோலுடன் முழு பாசிப் பயறு 1 கப், பெ.வெங்காயம் 2, பூண்டு 4பல், தக்காளி 2, புளி சிறு நெல்லி அளவு, மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன், மல்லித்தூள் ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், பூண்டு 6 பல், உப்பு தேவைக்கு. எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன், வெந்தயம், சோம்பு தலா கால் டீஸ்பூன். கறிவேப்பிலை சிறிதளவு,

செய்முறை:-பாசிப் பயறை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். ஒன்றரை கப் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டுங்கள். இந்த கரைசலுடன் பாசிப் பயறு (வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து). வெங்காயம், தக்காளி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வையுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்து, வெந்தயம், சோம்பு தாளித்து மல்லித்தூள் சேர்த்து வதக்கி குழம்பில் சேருங்கள். குழம்பை இறக்கப் போகும்போது ஒன்றிரண்டாக நசுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்குங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News