25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட   சிறப்பு முகாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

 கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2023-24-ம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் 90 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் 07.02.2024 மற்றும் 28.02.2024 ஆகிய இரு தினங்களில் வேளாண்மைத்துறை மற்றும் பல்வேறு இதர துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயனடையும் வண்ணம் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
இம்முகாமில் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தல், பி எம் கிசான் மற்றும் பிற திட்டங்களில் பயனாளிகளை பதிவு செய்தல், வண்டல் மண் எடுக்க விவசாயகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல், கால்நடைகள் நலம் பேண முகாம் (கால்நடைகளுக்கு செயற்கை கருத்தரித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் செய்தல்) பயிர் கடன் வழங்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பம் பெறுதல் என விவசாய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, 2023-24-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளாச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 90 கிராம பஞ்சாயத்துக்களைச் சார்ந்த விவசாயிகள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News