தலைமுடி வலுவடைய கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்
தலைமுடி உயிரற்றதாகவும், வறண்டதாகவும், நீளம் அதிகரிக்காமலும் இருந்தால், நீங்கள் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும். இதனுடன், முடி வலுவடைகிறது (Hair Growth) மற்றும் அவற்றின் வளர்ச்சியும் வேகமாக மாறும்.
5 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில்3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துபேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது முடியின் வேர்கள் முதல் நுனி வரை விரல்களின் உதவியுடன் இதை நன்கு மசாஜ் செய்யவும். நன்றாக தடவிய பின் ஷவர் கேப்பால் தலையை மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். இந்த ட்ரீட்மெண்ட்டை நீங்கள் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
இந்த கலவையானது கிட்டத்தட்ட அனைத்து முடி பிரச்சனைகளையும் தீர்க்க உதவும் ...
உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடிமுடி வளர்ச்சி இல்லாமை,வழுக்கையை தடுக்கும் மற்றும் புதிய முடி வளரும்.
முடி நரைப்பதை தடுக்கும்.முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.
முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடியை வலுவாக்கும்.பொடுகு நீக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
0
Leave a Reply