புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு
புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு இது. பாலை ஆற வைக்காமல் பாயாசம் செய்யக் கூடாது. பால் திரிந்து விடும். அப்படி பாயாசத்தில் சேர்க்கப்படும் பால் திரிந்து போனால், அதனுடன் கொஞ்சம் 2 சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா சேர்த்தால் போதும், திரிந்த பால் சரியாகிவிடும்.
நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நி றத்தில் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
*ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகள் வதங்கி வாடி போய்விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது நேரம் காய்கறிகளை ஊற வைத்து பின் நறுக்கினால் எளிதாக நறுக்கி விட முடியும். இதனால் காய்கறிகள் வீணாவது தடுக்கப்படும்.
வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்
.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
0
Leave a Reply