25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >>


சாலையோர உணவகம் நடத்தும் சிறுவனுக்கு உதவி அளிக்க ஆனந்த் மகிந்திரா முடிவு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சாலையோர உணவகம் நடத்தும் சிறுவனுக்கு உதவி அளிக்க ஆனந்த் மகிந்திரா முடிவு

டெல்லியின் திலக் நகர்பகுதியில் உள்ளசிற்றுண்டி கடையை10 வயதே ஆனஜஸ்பிரித் கவனித்துவருகிறார். ஜஸ்பிரித்திற்கு துணையாக அவரின் சகோதரிஉள்ளார். மாமாவின்அரவணைப்பில் இந்தகடையை ஜஸ்பிரித்கவனித்து வருகிறாராம்.சமீபத்தில் சிறுவன்ஜஸ்பிரித்தின் தந்தைநோய்வாய்ப்பட்டு உயிரிழந்துவிட்டதால் தனதுதாய் மற்றும்14 வயது அக்காவைகாப்பாற்றுவதற்காக அந்தகடையை தானேஏற்று நடத்துவதாகஜஸ்ப்ரீத் தெரிவித்துள்ளார்.சரப்ஜித் சிங் என்றஉணவு ரிவ்யூசெய்யும் நபர்இந்த கடைக்குசென்றுள்ளார். அவர்தான்அந்த சிறுவனிடம்வீடியோ எடுத்துபதிவிட்டு இருந்தார்.அந்த வீடியோதற்போது வைரல்ஹிட் அடித்துள்ளது. சிறுவன் நம்பிக்கையுடன் பேசும்வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானலைக்குகளை குவித்துள்ளது.27,000க்கும்மேற்பட்டோர் இந்தவீடியோவிற்கு பாராட்டுதெரிவித்து உள்ளனர். தற்போது டெல்லியைசேர்ந்த10 வயதுசிறுவனின் வீடியோஒன்று கடந்தசில தினங்களாகவேகமாக பரவிவருகிறது


இந்த வீடியோ பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திராவின் கண்ணிலும் பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய ஆனந்த் மகிந்திரா, சிறுவன் வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போனார். உடனடியாக தனது எக்ஸ் தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா சிறுவனுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனந்த் மகிந்திரா கூறியிருப்பதாவது:- துணிவின் பெயர் ஜஸ்ப்ரீத். எனினும், சிறுவனது கல்வி எந்த வகையிலும் பாதிக்க கூடாது. அவர் டெல்லியின் திலக் நகரில் இருக்கிறார் என கருதுகிறேன். அவரது தொடர்பு எண்ணை யாரேனும் வைத்திருந்தால் பகிரவும். அவரது கல்விக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து மகிந்திரா அறக்கட்டளை குழு முயற்சி செய்யும்"என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்கக் கூடியவர். ஆனந்த் மகிந்திராவின் ட்வீட்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரல் ஹிட் அடிக்கும். ஆனந்த் மகிந்திராவை எக்ஸ் தளத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். பலரது திறமைகளை பாராட்டுவதோடு பலருக்கும் ஆனந்த் மகிந்திரா உதவியும் செய்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது இந்த சிறுவனுக்கும் உதவ ஆனந்த் மகிந்திரா முன்வந்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News