ஆந்திர கோவைக்காய்ப் பொரியல்
தேவையான பொருட்கள் -கோவைக்காய் அரை கிலோ, உப்பு தேவைக்கு, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன்.
அரைக்க:-சின்ன வெங்காயம் 10, மிளகாய் வற்றல் 8
செய்முறை-:காய்களைக் கழுவி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். வெங்காயத்தின் தோலை நீக்கி வையுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து மிளகாய் வற்றலை லேசாக வறுத்து பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கி ஆறவைத்து ஒன்றிரண்டாக அரைத்து வையுங்கள், தண்ணீர் சேர்க்கக் கூடாது.மீதமுள்ள எண்ணெயைச் சூடாக்கி கடுகை தாளித்து, நறுக்கிய காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் வேக வையுங்கள். முக்கால் பதம் வெந்ததும் மூடியை நீக்கிவிட்டு வெங்காயக் கலவையைச் சேருங்கள், பச்சை வாடை நீங்கி, கலவை வதங்கி சுருண்டதும் இறக்குங்கள்.
0
Leave a Reply