சோம்பு கீரை போண்டா .
தேவையான பொருட்கள்-
சோம்புக் கீரை 1 கட்டு, கடலைமாவு 2கப், பச்சை மிளகாய், இஞ்சி பொடியாக நறுக்கியது தலா 1
டேபிள் ஸ்பூன், மல்லித்தழை சிறிதளவு, புதினா 1 கைப்பிடி, சமையல் சோடா கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:-
கீரை மல்லி, புதினா ஆகியவற்றைச் சுத்தம் செய்து, பொடியாக நறுக்குங்கள். அதனுடன் கடலை
மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, சமையல் சோடா. ஒரு கரண்டி அளவுக்கு சூடான எண்ணெய்
ஆகியவற்றைச் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்திற்கு
பிசையுங்கள். சூடான எண்ணெயில் பொரித்தெடுங்கள்.வித்தியாசமான வாசனையோடு,
சுவையிலும் ஜமாய்க்கும்.
0
Leave a Reply