ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆண்டு விழா
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் ஆண்டு விழா முன்னாள் மாணவர் சங்க கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. துணை முதல்வர் ரமேஷ்குமார் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்லூரி ஆட்சி மன்ற குழுத் தலைவர் கே.ஜி.பிரகாஷ் தலைமை உரை ஆற்றினார். கல்லூரிச் செயலர் எஸ்.சிங்கராஜ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் ஐஜி. எம் எஸ்.முத்துசாமி ஐபிஎஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது சிறப்புரையில், கல்வி என்பது ஒரு ஆயுதம் அதை எதற்காக, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம். படித்த அனைவருக்கும் இன்று வேலைவாய்ப்புகள் உண்டு. இளங்கலை பட்டம் படித்தவர்கள் இன்றைக்கு எத்தனையோ பெரிய,பெரிய பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாணவர்கள் கல்லூரி வேலை நாட்களை முழுவதும் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொழியை பிரதானப்படுத்தி ஆங்கிலம் தெரியவில்லை என்று தாழ்த்தி விடாமல் முன்னோக்கி வளர வேண்டும்.
திருவள்ளுவர் திருக்குறளை தமிழ் மொழியில் எழுதினார். தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறளை உலக பொதுமறை ஆக போற்றப்படுகிறது. எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமல்ல என்ன பேசுகிறோம் என்பது தான் முக்கியம் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். நிறைவாக மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பழையபாளையம் மகமை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply