மனைவி சொல்லை தட்டாத ஏ.ஆர்.ரஹ்மான்!
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். ஒரு பாடலுக்கு அவர் ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் தலைமையிலான மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டுகிறார்கள். இவ்வளவு வருமானம் இருந்தும் ஸ்டைலிஸ்ட் கூட இல்லாத நபர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. கடந்த15 வருடங்களாக பல பொது நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் சாய்ரா பானு தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிந்து தான் பங்கேற்று வருகிறார் ரஹ்மான்.அவர் எதை அணியச் சொல்கிறாரோ, அதையே தான் அணிந்துக் கொள்வதாக ரஹ்மான் கூறுகிறார். அவர் கடந்த பத்து, பதினைந்து வருடங்களாக என்னுடைய ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார். அவர், என்றார் ரஹ்மான்.
எல்லாக் கிரெடிட்டும் அவருக்கே சொந்தம் எனும் ரஹ்மான், தனது மனைவி பரிந்துரைக்கும் எந்த ஆடையும் தனக்கு பொருந்தவில்லை என்று தான் உணர்ந்ததில்லை என்றும், அணிய முடியாது என்று அவரிடம் சொன்னதில்லை என்றும் கூறியுள்ளார்.என் மனைவி ஓரளவு பாரம்பரியமானவர். பெரும்பாலும் கருப்பு நிறத்தை தான் விரும்புவார். நான் அதை மற்றும் அவ்வப்போது மாற்ற முடியுமா என்று கேட்பேன். அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றார். ரஹ்மானுக்கும் சாயிராபானுவுக்கும்1995ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ரஹ்மான் என 2 மகள்களும் 1 மகனும் இருக்கிறார்கள்.
இந்திய திரைப்பட இசை உலகின் ஹாட் மேன் ஏ.ஆர்.ரஹ்மான். அவர்'மெட்ராஸ் மொஸார்ட்’ போன்ற பல அடைமொழிகளால் குறிப்பிடப்படுகிறார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ஆஸ்கர் விருதை வென்று, இசை உலகிற்கு பெருமை சேர்த்த ரஹ்மான் தான், தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ். ஏ.ஆர்.ரஹ்மானின் அன்பு மனைவி சாய்ரா பானு தான், அவரது ஒப்பனையாளர். வேலையை அனுபவித்து செய்கிறார் என்றார் ரஹ்மான்.
0
Leave a Reply