மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, குழந்தைகளுக்கு எதிரான புகார்களை அனுப்பி வைக்க 1,37,000 அஞ்சல் அட்டைகள் (Post card) அச்சிடப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தைகளின் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, குழந்தைகளின் நலன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அடங்கிய 1,37,000 அஞ்சல் அட்டைகள் (Post card) அச்சிடப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அஞ்சல் அட்டையில் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவு, குழந்தைகள் சார்ந்த அனைத்து விதமான பிரச்சனைகள் ஏற்பட்டால் அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கும் படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி அருள்செல்வி அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply