ஆண்ட்டி-ஏஜிங் களாக்காய்
ஆண்ட்டிஏஜிங் எனப்படும் வயது முதிர்வை தடுக்கும் பண்புகளை கொண்ட களாக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், சருமம் பொலிவு பெறும். இளமையை தக்க வைக்கும் களாக்காய் சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது. களாக்காயை பேக் போல சருமத்தில் போட்டால், சருமம் பளபளக்கும். அதோடு, தலைக்கு பேக் போட்டால், முடி உதிர்வது நின்று, நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் களாக்காய் இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கிறது என்பது தெரியாததால் தான், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என விலை அதிகமான பழங்களை உண்கிறோம். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து களாக்காய் உண்டுவந்தாலே உடல் மெருகு கூடுவதோடு, மருத்துவரிடம் செல்வதை. தவிர்க்கலாம்.
0
Leave a Reply