அடிலெய்டில் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி. ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட "பார்டர்-சுவாஸ்கர் டிராபி" டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு, பிங்க் பால்,) அடிலெய்டு மைதானத்தில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 180, ஆஸ்திரேலியா 337 ரன் எடுத்தன. தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுக்கு 128 ரன் எடுத்து, 29 ரன் பின் தங்கியிருந்தது.
பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு மெக்ஸ் வீனி (10*), கவாஜா (9*) சேர்ந்து வெற்றி தேடித் தந்தனர். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடர் 1-1 என சமநிலையை எட்டியது.
ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் (140) ரன்) வென்றார். மூன்றாவது டெஸ்ட் (டிச. 14– 18) பிரிஸ்பேனில் நடக்க உள்ளது.
0
Leave a Reply