முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ
முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ, செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.
பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர,முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு முகம் பளிச்சென்று மின்ன ஆரம்பித்துவிடும்.
பெண்களுக்கு முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை அழிக்க மற்றும் சருமத்திற்கு அழகு சேர்க்க ஆவாரம் பூ அதிக அளவில் உதவி புரிகின்றது. மேலும் இது முடி உதிர்வு பிரச்சனையை தடுக்கவும் மிகச்சிறந்த அளவில் உதவுகிறது.
ஆவாரம்பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை உடலிலும் முகத்திலும் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் உடல் வறட்சி நீங்கிவிடும், நிறம் பளிச்சென்று இருக்கும்..
0
Leave a Reply