கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31.03.2024 அன்று காலை 07.00 மணியளவில் கல்லூரி மாணவ/மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல் சூலக்கரை மேடு வரை (ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 8 கி.மீ தூரமும்) நடைபெற உள்ளது.
மேற்படி மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அரசு/அரசு உதவிபெறும்/தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் மாணவ/மாணவியர்கள் கலந்து கொள்ளலாம் எனவும், இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ/மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,500 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply