மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில், (03.04.2024) மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு, மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடன் நடைபெறுவதற்கும் 100 சதவிகிதம் வாக்குபதிவை வலியுறுத்தியும், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘100 சதவீதம் வாக்களிப்போம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற இலச்சினை வரைபட வடிவில்(Image Formation) சுமார் 300 க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நின்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மக்களவைத் பொதுத் தேர்தல்- 2024 தமிழகத்தில் ஏப்ரல்-19 நடைபெறயுள்ளதையொட்டி 18 வயது நிரம்பிய அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அனைவரும் தவறாமல் வாக்களித்து 100 சதவீத இலக்கை அடையும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாதி, மதம், பொருளாதாரம் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவருக்கும் ஒரே வாக்கு தான். நமது வாக்குரிமையை பணம், பரிசுக்காக நாம் யாருக்கும் விட்டுத்தர கூடாது. நமது உரிமை இன்னொருவருக்கு அடகு வைக்க கூடாது. அதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும். வாக்குக்கு பணம் வாங்கி விடுவது பரவி விட்டது என்றால் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது என்பது மிகவும் தவறானது என்பது குறித்து எல்லோருக்கும் வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.மகளிர் சுய உதவி குழு தலைவர்கள், செயலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உங்களுடைய பகுதியில் உறுப்பினர்கள், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் குடும்பத்திற்கும் அந்த விழிப்புணர்வு செல்லும். ஒரு நாள் தரக்கூடிய பணமோ அல்லது பரிசுப் பொருட்களுக்காக நமது வாக்கினை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை எல்லோருக்கும் வலியுறுத்தி மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் நீங்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் வாக்குக்கு பணம் தரக்கூடிய அல்லது பெறக்கூடிய என இரண்டுமே தவறு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.அனைத்து பெண்களும், நேர்மையாக வாக்களித்து உங்களைச் சார்ந்தவர்கள், உறவினர்கள் அண்டை வீட்டார்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திருமதி பேச்சியம்மாள், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திரு.பிரேம்குமார், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply