அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.
உலகம் போற்றும் அயோத்தி ராமர் 500 வருடம் போராட்டத்திற்குப் பின் அயோத்தி இராமர் கோவிலில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு 22.01.2024 இல் ராமர் சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்தருணத்தில் நாம் இக்கோவில் வருவதற்காகப் போராடிய பல உயிர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து மதத்தினரும் வியந்து பார்க்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்.
ராமர் பிறந்த புண்ணிய பூமியான அயோத்தி நவீன ஆன்மிக தலமாக மாறியுள்ளது. ராமர் கோயிலை தரிசிக்க தினமும் 3 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கின்றனர். அயோத்தியை விரிவுபடுத்த ரூ 85 ஆயிரம் கோடியில் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கம் வாட்டர் மெட்ரோ உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 2031-ல் பணிகள் நிறைவடையும்.
ராமர் கோயில் மூன்று தளம் கொண்டது, நடன மண்டபம், கீர்த்தனை மண்டபம், பிரார்த்தனை மண்டபம் உட்பட ஐந்து மண்டபங்கள் உள்ளன. ராமர் கோயில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை தாங்கும். இந்தியாவின் பழங்கால நகரம் அயோத்தி. இதன் மற்றொரு பெயர் சாகேத். இது கோசல நாட்டின் தலைநகராக இருந்தது.அயோத்தியில் சரயு நதி பாய்கிறது இங்குள்ள சம்தா எரி 60 ஹெக்டேர் பரப்பு கொண்டது இதை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தரும் வி.வி.ஐ.பி. விருந்தினர்களை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் செல்ல 12 மின்சாரக் கார் வசதி செய்யப்பட்டுள்ளன.கும்பாபிஷேகம் முடிந்த பின் அயோத்திக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கிய பின்னர் மின்சாரக் கார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 10 கிலோ மீட்டருக்கு ரூ.250-ம், 20 கிலோ மீட்டருக்கு ரூ.400-ம் 12 மணி நேரத்துக்க ரூ.3,000, கட்டணமாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ரயில் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீராமர் கோயிலுக்கும், அயோத்தியின் பிற சுற்றுலா இடங்களுக்கும் இக்கார்களை பயன்படுத்தலாம். அலைபேசி, செயலி வாயிலாக இந்த மின்சாரக் கார்களை புக்கிங் செய்யலாம். அயோத்தியில் 100 மின்சார பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தி நகரின் குறுக்கே ஓடும் சரயு நதியில் சூரிய சக்தியில் இயங்கும் படகு, படகு இல்லம், வாட்டர் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
0
Leave a Reply