வாழைக்காய் பொடிமாஸ்
வாழைக்காய் பொடிமாஸ்செய்யும்போது கடைசியாக 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.
வெந்தயக் குழம்பு கொதித்து இறக்கி வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி எள்ளு பொடியை போட்டால் குழம்பு மிகவும்வாசனையுடன் இருக்கும். அல்லது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டால் ருசி கூடும்.
பால் ,தயிர் ஆடையை தனியேஎடுத்து ஃபிரிட்ஜில் வைத்து சிறிது நேரம் வைத்து கடைந்தால் வெண்ணெய் உருண்டு நன்றாகவரும்.
இட்லிக்கு மாவு ஆட்டும்போது ஒருவெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் இட்லி பூப்போல இருக்கும்.
.பாத்ரூமில் ஏதாவது மூலையில் ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் வைத்தால் பாத்ரும் மணம் வீசும்.
முருங்கைக்காய் நீண்ட நாள் வாடாமல் இருக்க, சாம்பாரில் சேர்க்கும் அளவு துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.
0
Leave a Reply