வாழைத்தண்டு நோய் தீர்க்கும் காய்கறி
பித்தத்தைத் தணிக்கக்கூடியது. இயல்பாகச் சூடு நிறைந்த தண்டு என்றாலும் சிறுநீரைப் பெருக்கும் வாழைத்தண்டுப் பச்சடி உடம்பு உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உடல் உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும்.
அதை உண்டால் குடலில் சிக்கிய மயிர், தோல், ஆகியவற்றை நீக்கும். இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,வைட்டமின் பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
ரத்தத்தில் உள்ள அசுத்த நீரைப் பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயலைச் சீராக்கிச் சிறுநீரகக் கல் அடைப்பைத் தடுக்கும்.
வாழைத்தண்டைப் பொரியல், கூட்டாகச் செய்து சாப்பிடுவது மட்டுமே நமக்குத் தெரியும். அது பல வகைகளில் நமக்கு மருந்தாக உதவுகிறது.
சிறுநீரகப் பிரச்னை மற்றும் அதீத உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் சிறுநீரை நன்றாக வெளியேற்றும்.
0
Leave a Reply