அழகுப் பொருள் முல்தானி மட்டி
,எண்ணெய் பசை சருமம், முகப்பருவால் பொலிவை இழந்த சருமம், வறண்ட சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது முல்தானி மெட்டி.
ஃபுல்லர்ஸ் எர்த் என்றழைக்கப்படும் முல்தானி மட்டி, பலரது விருப்ப தேர்வாகவும் இருக்கிறது.
சருமத்திற்கு இதை பயன்படுத்துவதால் எந்தவொரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.
குறிப்பாக முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகளிது, முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், எண்ணெய் பசை ,தழும்புகள் பருக்களை அகற்றவும் செய்கிறது.
முல்தானி மட்டியை எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள துளைகளையும் அழுக்குகளையும் நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தி எண்ணெய் வடியும் பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைக்கிறது.
முல்தானி மட்டியை தண்ணீரில் குழைத்தோ அல்லது சந்தனம், ரோஸ் வாட்டர் போன்றவற்றுடன் கலந்தோ முகத்தில் ஃபேஸ் பேக்காக போடலாம்.
வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ செய்து வரும்போது முகத்தில் உள்ள எண்ணெய் பசை வடியும் பிரச்சனை குறையும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும், வாரம் இருமுறை இதனை செய்து வரலாம்.
முகத்தை பளபளப்பாக்க முல்தானி மட்டியுடன் சேர்க்க வேண்டியவை..
,முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறுமுல்தானி மட்டி மற்றும் முட்டை வெள்ளைக்கரு கலவை.
முல்தானி மட்டி மற்றும் இளநீர் கலவை.
முல்தானி மட்டி மற்றும் கேரட் கலவை.
முல்தானி மட்டி மற்றும் பப்பாளி கலவை.
முல்தானி மட்டி மற்றும் சந்தன பவுடர் கலவை.
முல்தானி மட்டி மற்றும் தேன் கலவை.
முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலவை,
அழகை அதிகரிக்க உதவும் அற்புதமான அழகுப் பொருள் முல்தானி மட்டி.
0
Leave a Reply