வயிற்று புண்களை விரட்ட பெஸ்ட் உணவு மோர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள்
இரைப்பை அழற்சி என்பது வேறு.. அல்சர் என்பது வேறு.. அல்சர் வர எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. சிகரெட் பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள், ஆல்கஹால் பயன்படுத்துபவர்கள் போன்றோருக்கு அல்சர் வரலாம். அல்லது,பாக்டீரியா தொற்று, மன உளைச்சல், அதீத கவலை, அதிகமாக காபி குடிப்பது போன்ற காரணங்களினாலும் அல்சர் வரலாம்.உணவு சரியாக எடுத்து கொள்ளாதது, அதிக உணவு, அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும்,அல்சர் வரலாம்.. அதேபோல,உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கும் அல்சர் போன்ற வயிற்றுப் புண் பிரச்சனை வரலாம்.ஒருவகையான வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் அல்சர் வரலாம்.. அல்சர் பிரச்சனை ஆரம்பக்கட்டமாக இருந்தால் உணவு முறை மூலமாகவே தீர்வு காணலாம்.அல்சர் ஏற்பட்டுவிட்டால் வயிற்றில் புண்கள் ஏற்படும். முதலில்,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.. காரணம்,காபியில் காஃபின் என்ற பொருட்கள், வயிறு புண்களை அதிகப்படுத்திவிடும்..வயிற்றில் அமிலத்தன்மையையும் அதிகரிக்க செய்துவிடும்.இதனால் வயிறு வலி அதிகமாகும். இந்த காஃபின் நிறைந்த ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவுப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.
காரம் நிறைந்த, மசாலா அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பால் நிறைய குடிக்கக்கூடாது.பாலில் நிறைய கொழுப்பு உள்ளதால், வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை இந்த பால் அதிகப்படுத்திவிடும்.. கூல் டிரிங்க்ஸ்,சோடா போன்ற பானங்களை தவிர்க்கலாம். இதுவும் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகப்படுத்திவிடும். சிவப்பு இறைச்சியிலும்,நிறைய கொழுப்பு, புரோட்டீன் உள்ளதால், அவைகளையும் தவிர்த்துவிட வேண்டும்.வயிற்றில் அல்சர் புண் இருப்பவர்கள், முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்..காரம், மசாலா இல்லாத நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகளை சாப்பிட வேண்டும். தேங்காய்ப்பாலுக்கு வயிற்றிலுள்ள புண்களை ஆற்றும் தன்மை உண்டு.. தினமும் அரை கிளாஸ் தேங்காய் பால் குடிப்பதால்வயிறுஎரிச்சல்குறையும்,வயிறு புண்களும் மெல்ல ஆற துவங்கும்.அல்லது வெறும் மணத்தக்காளி கீரைகளை நான்கைந்து கழுவி வெறுமனே மென்று சாப்பிடலாம்.
தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், புண்களுக்கு சிறந்தது. மோர் குடிக்கலாம்.. இதனால், வயிறு எரிச்சல் தணிவதுடன், உடல் முழுவதுமே உடல் சூட்டினை தணித்துவிடும்.மாதுளை ஜூஸ்களுக்கும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி உண்டு..அதனால், மாதுளை சாறு தினமும் அரை கிளாஸ் குடிக்கலாம்..கீரைகளில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். வயிற்றுப்புண்,வாய்ப்புண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது..அதேபோல, அகத்திக்கீரையை சாப்பிடலாம். அகம்+ தீ+ கீரையே அகத்திக்கீரையாகும்.அதாவது உடலுள்ள உஷ்ணத்தை விரட்டக்கூடியது இந்த அகத்திக்கீரைகள்..இந்த2 கீரைகளையும் சமைக்கும்போது,காரம் அதிகம் சேர்க்காமல், வாரம் 2முறையாவது சாப்பிட வேண்டும். எந்த கீரை செய்தாலும், பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.
முட்டைக்கோஸ், பூசணிக்காய், முள்ளங்கி, புடலைங்காய்,பூசணிக்காய், வெள்ளரிக்காய், போன்றவற்றை உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.. இளநீர் அடிக்கடி குடிப்பதன் மூலம் அல்சர் குறையும். ஆனால்,இதெல்லாம் அல்சர் புண்களை ஆற்றுவதற்கு ஓரளவு மட்டுமே உதவும்.. மற்றபடி, அல்சர் புண்கள் தீவிரமாவதற்கு முன்பேயே, மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.
0
Leave a Reply