பாக்யாத லட்சுமி ராவம்மா.. (வரலட்சுமி நோன்பு)
நம் வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து இரண்டு நாள்கள் தங்க வைத்து ஒவ்வொரு வீட்டிலும் செல்வ வளத்தை பெருக்க பூஜைகள் செய்வது தான் வரலட்சுமி பூஜை.வரலட்சுமி விரதத்தை ஆதியில் தேவலோகப் பெண்கள் கடைப்பிடித்ததாகவும் பின்பு சித்திர நேமி என்னும் பெண் அறிந்து தன் துயர் நீங்கப் பெற்றார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சாருமதி என்னும் பெண்ணின் கனவில் வரலட்சுமி தாயார் தோன்றி வரலட்சுமி விரத முறைகளை உபதேசித்து அதைக் கடைப்பிடிக்குமாறு கூறினார் என்றும் அன்றுமுதல் இந்த விரதம் பூலோகத்தில் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.ஆதி சங்கரர் பிட்சையின்போது நெல்லிக்கனியை தானமாகப் பெற்று தானமிட்ட பெண்மணியின் தரித்திரம் நீங்கும் வண்ணம் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியது ஒரு துவாதசி திதி. ஏகாதசி திதி அன்று விரதம் இருந்தவர்கள் துவாதசி திதி அன்றுதான் பாரனை முடித்து உணவு உட்கொள்வர். ஏகாதசி அன்று பெருமாளை வழிபட்டு கூடவே துவாதசி அன்று வரலட்சுமியையும் வழிபடக் கிடைத்திருக்கும் அற்புதமான நாள்
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம்.வழக்கமாக வரலட்சுமி நோன்பு, ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி வழிபாட்டு மிகவும் உகந்தநாள். பெருமாள் வாசம் செய்யும் இடம் பாற்கடல். அந்தப் பாற்கடலைக் கடைந்தபோதுதான் மகாலட்சுமி தேவி அவதரித்தார்.:பொதுவாகவே விரதங்கள் என்பவை குடும்பங்களில் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுபவை. குடும்பத்தில் இல்லாத விரதங்களைக் கைக்கொள்ளும் வழக்கம் நம் மரபில் இல்லை. பெண்கள் திருமணமான பிறகு பிறந்தவீட்டில் கடைப்பிடித்த விரதங்கள் பலவற்றைப் புகுந்த வீட்டில் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால் அவற்றை விட்டுவிடுவார்கள். ஆனால், அவ்வாறு புகுந்தவீடு, பிறந்த வீடு என்ற பேதமின்றி யாரும் கடைப்பிடிக்கலாம் என்னும் விதியை உடையது வரலட்சுமி விரதம்.எந்த நோன்பையும்விட வரலட்சுமி நோன்பு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம் இல்லத்துக்குக் கொண்டுவரும். ஆண்டு முழுவதும் வீட்டில் ஆரோக்கியத்தையும் செல்வச்செழிப்பையும் வரமாகத் தரும் நோன்பு இது. இதனால், கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் என்பது ஐதிகம்..
ஓம் கமலாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் லோக மாத்ரே நம:
ஓம் விச்’வ ஜநந்யை நம:
ஓம் மஹாலட்சுமியை நம:
ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:
ஓம் விச்வஸாக்ஷிண்யை நம:
ஓம் சந்தரசோதர்யை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள், மாமியாரிடம் கட்டிக்கொள்வது விசேஷம். தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ளலாம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.
0
Leave a Reply