சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைக்க....
சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு 'வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்னீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்
கீரை, வெண்டைக்காய் போன்றவை முழுவதுமாக வதங்கிய பிறகு உப்பு சேர்க்க வேண்டும். ஏனெனில் அது முழுவதுமாக வதங்கியதும் அதன் உண்மையான அளவு தெரியும்,
ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வந்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.
ஊறுகாய் மேலே எண்ணெய் அதிகமாக மிதந்தால் அதை கார குழம்பு வைக்கும் போது பயன்படுத்தலாம்.
சப்பாத்தி மிகுந்துவிட்டால் அதை மிக்ஸியில் பூ போல அரைத்து ,சர்க்கரை, வறுத்தி முந்திரி சேர்த்து பரிமாறுங்கள். குழந்தைகள் கேட்டு. விரும்பி சாப்பிடுவார்கள்.
0
Leave a Reply