மொச்சைப்பயிற்றுக் குழம்பு
தேவையான பொருட்கள்- ரங்கூன் மொச்சை 200 கிராம், கத்தரிக்காய் 100 கிராம், முருங்கைக்காய் 1, வெங்காயம் 5, மிளகாய் 1, பூண்டு 1, புளி சிறிது, வற்றல் 6, சீரகம் 2 தேக்கரண்டி, தேங்காய் சீல் 2, தாளிப்பதற்கு எண்ணெய், உப்பு தேவையான அளவு.
செய்முறை- மொச்சைப்பயிற்றை குக்கரில் அரைமணிநேரம் வேக வைக்கவும். நன்றாக வெந்தபின் தண்ணீரை வடித்து விட்டு வேறு தண்ணீர் சேர்த்து நறுக்கிய காய்கறிகள், மிளகாய், உப்பு, மஞ்சள் சேர்த்து திரும்ப குக்கரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும். வாணலியில் 2 கரண்டி, எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, தாளித்து வெங்காயம் கருவேப்பிலை போட்டு வதக்கி, புளிக்கரைசலில் வற்றல், சீரகம், தேங்காய்ச் சீல் அரைத்து, கலந்து ஊற்றி கொதித்ததும் வேக வைத்திருக்கும் பயிற்றுடன் கலந்து குழம்பு எல்லாம் சேர்த்துகொதித்து வற்றியதும். இறக்கி வைக்கவும். குழம்பு கெட்டியாக வேண்டுமானால் 1 மேஜைக்கரண்டி துவரம் பருப்பை பயிறுடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
0
Leave a Reply