மோர் மிளகாய்
மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
அரிசி குருணையில் உப்புமாசெய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவுவறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடுஇருக்கும்.
வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து போட்டால் சுவை கூடும்.
வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரைத்தால், சட்னி கசக்காமல் ருசிக்கும்.
0
Leave a Reply