கேப்பை இடியாப்பம்
தேவையான பொருட்கள்- கேப்பை மாவு 1 கப், அரிசி மாவு 1கப்,எண்ணெய் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, தேங்காய் ஒரு மூடி துருவல் நாட்டுச் சர்க்கரை அல்லது வெள்ளை சர்க்கரை தேவையான அளவு
செய்முறை- கேப்பை, அரிசி, மாவில் சுடுதண்ணீர் மற்றம் சிறிதளவு, எண்ணெய், தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். 10 நிமிடம் கழித்து பிழிந்து வேகவைக்கவும். வெந்தவுடன், தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரை போட்டு லேசாக கிளறினால் கேப்பை இடியாப்பம் ரெடி.
காரமாக சாப்பிட விரும்பினால் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து, கேரட் துருவியது, பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போட்டு வதக்கி, வெந்த கேப்பை இடியாப்பம், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்.
0
Leave a Reply