முந்திரிப்பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள் -முந்திரிப்பருப்பு 150 கிராம், தேங்காய்ப்பால் அரை கப் கெட்டியானது, வெங்காயம் நறுக்கி 1 மேஜைக்கரண்டி, இரண்டாவது பால் 1 கப், மிளகாய் 2 உப்பு தேவைக்கேற்ப. சீரகம் மிளகாய், வற்றல், மல்லி, வறுத்து அரைக்கவும்.
செய்முறை-முந்திரிப்பருப்பை வேக வைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் மிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கவும். வதங்கியவுடன் இரண்டாவது தேங்காய்ப்பால் விட்டு, உப்புப் போட்டு கொஞ்சம் வேக விடவும். வெங்காயம் வேக விடவும் வெங்காயம் வெந்தவுடன் கெட்டியான தேங்காய்ப்பால் அவித்த முந்திரிப்பருப்பையும் சேர்த்துப் போட்டு குழம்பு ஒன்று சேர்ந்து வரும் சமயம் இறக்கிப் பரிமாறவும்.
0
Leave a Reply