சார்கோல் மாஸ்க்
சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. பற்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கரித்தூள் முகத்திற்கு, சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை தருகின்றன.
தேவையான பொருட்கள் : கரித்தூள்- 1 டீஸ்பூன்,புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1, ஆப்பிள் சைடர் வினிகர்-2 டீஸ்பூன், அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டு
பயன்படுத்தும் முறை:ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும்.
0
Leave a Reply