இந்தியக் கனவினை நனவாக்கிய செஸ் ஒலிம்பியாட் இந்திய செஸ் நட்சத்திரங்கள்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45 வது சீசன் ஹங்கேரியில் நடந்தது. மொத்தம் 197 அணிகள் களமிறங்கின. ஒபன் பிரிவில் இந்தியா சார்பில் குகேஷ் அர்ஜீன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா பங்கேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதன்முறையாக 11 சுற்றில் 10 வெற்றி 1 டிரா என 21 புள்ளி எடுத்த இந்தியா முதலிடம் பிடித்து, இந்தியா சாம்பியன் ஆனது. 10 போட்டியில் 9 புள்ளி எடுத்த குகேஷ் ( 8 வெற்றி 2 டிரா ) 11-ல் 10 புள்ளி எடுத்த அர்ஜீன் ( 9 வெற்றி 2 டிரா ) என இருவரும் தனிநபர் பிரிவுகளில் தங்கம் வென்றனர்.
பெண்கள் பிரிவில் இந்தியா சார்பில் ஹரிகா, திவ்யா, வைஷாலி, வந்திகா, தானியா பங்கேற்றனர். 11 சுற்றில் 19 புள்ளி ( 9 வெற்றி 1 டிரா 1 தோல்வி ) எடுத்து முதன்முறையாக தங்கம் வென்று சாதித்தது. தனிநபர் பிரிவில் திவ்யா ( 11-ல் 8 வெற்றி 3 டிரா ) வந்திகா ( 9-ல் 6 வெற்றி 3 டிரா ) தங்கம் கைப்பற்றினர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை கோப்பை வென்றவர் இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் 54 இளம் இந்திய செஸ் நட்சத்திரங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். இவர் குறித்து சர்வதேச செஸ் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியில் இந்திய செஸ் வளர்ச்சியின் தந்தை என பாராட்டு தெரிவித்துள்ளது.
0
Leave a Reply