25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
(நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >>


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வழிகாட்டுதலின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம் செப்டம்பர் 20-ம் தேதி முதல் அந்தந்த வட்டார பஞ்சாயத்து அலுவலகங்களில் விடுபட்ட பயனாளிகளுக்கு புதியதாக பதியப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாமில்; 11, 860 பயனாளர்களுக்கு புதியதாக மருத்துவ காப்பீட்டு அட்டை பதியப்பட்டுள்ளது.
மேலும் கீழ்க்காணும் அட்டவணைப்படி அக்டோபர் 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகாம் நடைபெறும் நாட்கள் விபரம்:

விருதுநகர் யூனியனில், 8ம் தேதி காசி ரெட்டியாபட்டி, 9ம் தேதி வி.முத்துலிங்கபுரம்,10ம் தேதி செங்குன்றாபுரம், 13ம் தேதி கே.புதூரிலும்,அருப்புக்கோட்டை யூனியனில், 8ம் தேதி புலியூரான், 9ம் தேதி கோவிலாங்குளம், 10ம் தேதி ஆதிபட்டி, 13ம் தேதி செட்டிகுறிச்சியிலும்,சிவகாசி யூனியனில், 8ம் தேதி ஈஞ்சார், 9ம் தேதி ஈஞ்சார்,10ம் தேதி நடையனேரி, 13ம் தேதி மேலஆமத்தூரிலும்,காரியாபட்டி யூனியனில், 8ம் தேதி மந்திரி ஓடை, 9ம் தேதி புளியம்பட்டி, 10ம் தேதி முடுக்கன்குளம், 13ம் தேதி எஸ்.கல்லுப்பட்டியிலும்,நரிக்குடி யூனியனில், 8ம் தேதி செம்பொன்னாங்குறிச்சி, 9ம் தேதி இருஞ்சிறை, 10ம் தேதி இலுப்பையூர், 13ம் தேதி நல்லுக்குறிச்சியிலும்,  ராஜபாளையம் யூனியனில், 8ம் தேதி சொக்கநாதன்புதூர், 9ம் தேதி சொக்கநாதன்புதூர், தெற்கு தேவதானம், 10ம் தேதி சுந்தர நாச்சியார்புரம், 13ம் தேதி சம்சிகாபுரத்திலும்,சாத்தூர் யூனியனில், 8ம் தேதி கத்தாளம்பட்டியிலும், 9ம் தேதி மணீப்பாறை பட்டி, 10ம் தேதி மேலமடை, 13ம் தேதி D.மேட்டுப்பட்டியிலும்,திருவில்லிபுத்தூர் யூனியனில், 8ம் தேதி இடையன்குளத்திலும், 9ம் தேதி முள்ளிக்குளத்திலும், 10ம் தேதி அயன்நாச்சியார் கோவில், 13ம் தேதி பிள்ளையார்நத்ததிலும்,திருச்சுழி யூனியனில், 8ம் தேதி தமிழ்பாடியிலும், 9ம் தேதி குலேசேகர நல்லூரிலும்,10ம் தேதி வேலாயுதபுரத்திலும், 13ம் தேதி தும்முசின்னம்பட்டியிலும்,வெம்பக்கோட்டை யூனியனில், 8ம் தேதி செவல்பட்டியிலும், 9ம் தேதி விஜயரங்காபுரம்,10ம் தேதி ஆலங்குளத்திலும்,13ம் தேதி அப்பையநாயக்கன்பட்டியிலும்,வத்றாப் யூனியனில், 8ம் தேதி மகாராஜபுரத்திலும், 9ம் தேதி மகாராஜபுரத்திலும், 10ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும், 13ம் தேதி ரெங்கப்பநாயக்கன்பட்டியிலும் முகாம்கள் நடைபெறுகிறது

                  மேலும் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 8ம் தேதி முறையே S .V  .அண்ணாமலையம்மாள் மகப்பேறு இல்லம்   9, 10-ம் தேதி சிவன் கோவில் அங்காடி, 13-ம் தேதி பாத்திமா நகர் சத்துணவு மையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.எனவே பொது மக்கள் தங்கள் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகாமில் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலுலவர் விவரம்:

மாவட்ட திட்ட அலுவலர்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்,
விருதுநகர்.
கைப்பேசி எண். 73730 04974 - என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News