25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >> விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு >>


முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்”-கீழ் உறுப்பினர்களாக உள்ள நபர்களின் விபரங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
உறுப்பினர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் உழவர் பாதுகாப்பு அட்டை ஆகிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. இப்பணிகள் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது. உறுப்பினர்கள் மேற்படி ஆவணங்களை வழங்க ஏதுவாக சிறப்பு முகாம்கள் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின், அலுவலகங்களில் 20.02.2024 அன்று நடைபெற உள்ளது.
மேற்படி சிறப்பு முகாம்களில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ள நபர்கள் முகாம் நடைபெறும் தங்களின் கிராம நிர்வாக அலுவலகங்களுக்குச் சென்று தங்களின் ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் உழவர் பாதுகாப்பு அட்டை  ஆகியவற்றின் நகல்களை வழங்கி தங்களின் தகவல்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News