தேங்காய் சட்னி கூடுதல் சுவையுடன்' இருக்க
பீர்க்கங்காயினை எப்பொழுதும் தோல் நீக்கி தான் சமைப்போம். அந்த தோலினை வைத்து சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய் சட்னியை கடைசியில் தாளித்து சேர்ப்போம். அதற்கு பதிலாக அதே தாளித்த பொருட்களை சட்னியில் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையுடன்' இருக்கும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய உடன், தேங்காய் விழுதினை சேர்த்து வதக்கி இறக்க வேண்டும். பின்னர் அவற்றை அரைத்தால் வெங்காயதேங்காய் சட்னி தயார்.
வதக்கிய வெங்காயத்துடன் புதினா சேர்த்து சட்னி செய்தால் வெங்காயபுதினாசட்னி தயார்.
தக்காளி சட்னி செய்யும் போது நன்றாக பழுத்த தக்காளியில் செய்தால் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply