கிருஷ்ணன்கோவிலில் டோல்கேட் அமைத்து , தீவிரமாக திருமங்கலம் - ராஜபாளையம் இணை நான்கு வழிச்சாலை பணிகள்
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மதுரை, விருதுநகர், தென்காசி - மாவட்டத்தின் முக்கிய நகரங்களான திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார், சிவகிரி, வாசுதேவநல்லுார், புளியங்குடி, கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகிறது.முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கிருஷ்ணன்கோவில் அருகே டோல்கேட் அமைகிறது.2025 ஜூன் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply