25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >>


மொறுமொறு தக்காளி தோசை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மொறுமொறு தக்காளி தோசை

தக்காளி தோசையை ஒரு முறை இப்படி சமைத்து பார்க்கலாம்.

பெரிய அளவு பழுத்த தக்காளி – 1,சிறிய துண்டு – இஞ்சி,சீரகம் – 1/4 ஸ்பூன்,சோம்பு – 1/4 ஸ்பூன்,பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை,
மிளகாய் பொடி – 1 ஸ்பூன், இவையனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.

 ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தோசை மாவை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் முன்பு அரைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு இந்த மாவுக்கலவையுடன்,2 சிட்டிகை உப்பு,1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு ,சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இப்போது இந்த மாவுக் கலவையை5 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். இதற்கிடையில், தோசைக்கல்லுக்கு மிதமான சூடு சேர்த்து தோசை ஊற்ற தயார் செய்துகொள்ளவும்.பிறகு அதில் மாவை ஊற்றி அவை ஓரளவு வெந்து வரும் போது நெய் அல்லது எண்ணெய் விட்டு மொறுமொறுவென இருக்கும் தோசையை எடுக்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News