வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதனால்தான் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை தரும். கோடை காலத்தில் வெள்ளரிக்காயை உட்கொண்டால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனையே வராது. வெள்ளரிக்காயை முக அழகை கூட்டவும் பயன்படுத்தலாம். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் வெள்ளரிக்காயை முகத்தில் தடவி வரவும். வெள்ளரிக்காய் தோல், சரும பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது..
வெள்ளரி சாறுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இப்போது அதை உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் தேய்க்கவும்.கடைசியாக முகத்தை நீரால் அலசவும்.கற்றாழை பெரும்பாலான சரும வகைகளுடன் பொருந்தக்கூடியது. எனவே முகத்தை சுத்தம் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் .
வெள்ளரிக்காயை வைத்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கதேவையான பொருட்கள்- தேயிலை மர எண்ணெய்-2 சொட்டு,வெள்ளரிக்காய் சாறு – 1 கப்.
வெள்ளரிக்காய் சாறுடன் தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இப்போது இந்த கலவையை ஃபேஸ் மாஸ்க் போல் முகத்தில் பூசவும்.முகப்பரு மீதும் இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.இந்த ஃபேஸ் மாஸ்க், சரும வறட்சி மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது.
குறிப்பு: முகத்தை ஈரப்பதமாக்குவதற்கு முன்பு வெறும் சருமத்தில் தேயிலை மர எண்ணெயை தடவ கூடாது.
0
Leave a Reply