25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >> ராஜபாளையம் நகராட்சியில் இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி  வரும் நகராட்சியின் அனைத்து துறையினர். >> ராஜபாளையத்தில்  மாணவர்கள் மூலம் டிஜிட்டல் சர்வே . >> சொக்கர் கோயிலில்  மாசி மக பிரம்மோற்ஸவ தேர்த் திருவிழா >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா >> இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று அமைப்பும் இணைந்து மகளீர் தின விழா கொண்டாட்டம் >> ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் . . >> ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை, மேக மலை புலிகள் காப்பகத்தில்எண்ணிக்கை அதிகரித்துள்ள சாம்பல் நிற அணில்கள் >> ராஜபாளையம் முடங்கியார் ரோடு, செண்பகத்தோப்பு ரோட்டில் செக்போஸ்ட் திறப்பு.  >>


வெண்டைக்காய் சாகுபடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெண்டைக்காய் சாகுபடி.

.வெண்டி விதை நேர்த்தி செய்து, விதைகளை நடவு செய்ய வேண்டும். பையில் உள்ள ஊடகத்தின்(மண் அல்லது காயர் கம்போஸ்ட்) மீது விரலில் குழியெடுத்து விதைகளை ஊன்ற வேண்டும். ஒரு குழியில் இரண்டு விதைகள் ஊன்றலாம். நடவு செய்த ஒரு வாரத்தில் விதைகள் முளைக்கத் துவங்கும். பத்து நாள்களில் நன்றாக முளைத்துவிடும். அந்தச் சமயத்தில் ஒவ்வொரு குழியிலும் நன்றாக வளர்ந்துள்ள ஒன்று அல்லது இரண்டு செடியை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு செடியைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும். ஒரு பையில் ஒரு செடியை மட்டும் வைப்பது சிறந்தது. பெரிய பையாக இருந்தால் இரண்டு செடிகள் இருக்கலாம். அதற்கு மேல் அதிக எண்ணிக்கையில் ஒரே பையில் செடிகள் இருக்கக் கூடாது. நடவு செய்த30 முதல்35ம் நாள்களுக்குள் பூவெடுக்கத் தொடங்கும். அந்த நேரத்தில்10 லிட்டர் தண்ணீருக்கு300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.30ம் நாள் முதல்15 நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தலாம். தொடர்ந்து பஞ்சகவ்யாவைக் கொடுத்துவந்தால், இலைகள் அதிகமாக உருவாகும். அதிகப் பூக்கள் பூக்கும். பூவெடுத்ததிலிருந்து ஏழு நாள்களில் காய் உருவாகத்தொடங்கும். பிறகு ஒன்றரை நாள் இடைவெளியில் அறுவடைக்கு வரும். ஒருநாள் விட்டு ஒருநாள் காய் பறிக்கலாம்.

வெண்டைக்காயைப் பிஞ்சாக இருக்கும்போது பறிக்கக் கூடாது. அதேபோல முற்றிய காயையும் பறிக்கக் கூடாது. சரியான முதிர்ச்சி அடையாத பிஞ்சுக்காய்களைத் தொடர்ந்து பறித்தால்100 நாள்கள் மகசூல் கொடுக்க வேண்டிய பயிர்,80 நாள்களில் தனது மகசூலை நிறுத்திக்கொள்ளும். வெண்டைக்காயின் கொண்டைக்கு மேலே, இரண்டு முதல் மூன்று அங்குல உயரத்தில் இருக்கும் காய்களைப் பறிப்பதுதான் சிறந்தது.வெண்டைக்காயைத் தாக்கும் பூச்சிகளில் சாறு உறிஞ்சும் பூச்சி, அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ, செந்நாவாய் பூச்சி ஆகியவை முக்கியமானவை. அசுவினித் தாக்குதலுக்கு உள்ளான இலையின் அடிப்பாகம் சுருங்கியதுபோல இருக்கும். விளிம்பு மடங்கத் தொடங்கும். தத்துப்பூச்சித் தாக்குதல் இருந்தால் இலை மஞ்சள் நிறமாக மாறி, பிறகு பழுப்பு(பிரவுன்) நிறத்துக்கு மாறும். இலை, தீயில் வாட்டியதுபோலக் காணப்படும். இந்த இரண்டு பூச்சிகளையும் தடுக்க 5 சதவிகித வேப்பங்கொட்டைக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த20ம் நாள் முதல் ஒவ்வொரு25 நாள் இடைவெளியில் சாகுபடிக்காலம் முடியும் வரை வேப்பங்கொட்டைக் கரைசலைத் தெளித்து வர வேண்டும்.

வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு பூச்சி வெள்ளை ஈ. இது ஒருவகையான வைரஸ் கிருமியைப் பரப்பும்.இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய்’ என அதற்குப் பெயர். இந்த நோய் தாக்கப்பட்ட இலை முழுவதும் மஞ்சள் நிறமாகிவிடும். வெண்டி சாகுபடியில் அதிக பிரச்னையாக இருப்பது இதுதான். இதனால், அதிகளவில் மகசூல் பாதிப்பு ஏற்படும். இலை மஞ்சள் நரம்பு நோய் தாக்கிய இலைகளில் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. அதனால், செடிகளுக்கு உணவு கிடைக்காது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அந்த நோயைப் பரப்பும் ஈயை வேப்பெண்ணெய் கரைசல் மூலம் கட்டுப்படுத்தலாம். இருபது நாள்கள் இடைவெளியில் தொடர்ந்து5 சதவிகித வேப்பெண்ணெய்க் கரைசல் பயன்படுத்தி வந்தால், அசுவினி, தத்துப்பூச்சி, வெள்ளை ஈ இவை மூன்றையும் கட்டுப்படுத்தலாம். இலை மஞ்சள் நரம்பு நச்சுயிரி நோய் தாக்காத சில கலப்பின ரகங்களைச் சாகுபடி செய்வதன் மூலமும் இந்த நோயிலிருந்து வெண்டைச் செடியைக் காப்பாற்றலாம். 

செடியில் பூ உருவாகி, காய்கள் தோன்றும் நேரத்தில்தான் இலைகளில்`குளோரோஃபில்' அளவு அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில்தான் வெள்ளை ஈ வருகை இருக்கும். இந்த ஈ, பெரும்பாலும் களைச்செடிகளில்தான் இருக்கும். அதனால், பூவெடுக்கும் நேரத்தில் மாடித்தோட்டத்தில் களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமானது.வெண்டைக்காயில் காய்ப்புழுத்தாக்குதலும் இருக்கும். காய்ப்புழுத் தாக்குதலுக்குள்ளான வெண்டைக்காய்கள் வளைந்து, எட்டுபோல, அரைவட்டமாக வடிவம் மாறிக் காணப்படும். காய்களில் துளைகளும் இருக்கும். தாய் அந்துப்பூச்சி, இலையின் குருத்துகள், பூவிலிருந்து முளைக்கும் பிஞ்சுகளில் முட்டை போட்டுவிடும்.அதிலிருந்து வெளிவரும் புழுக்கள், தண்டின் உள்ளே போய், விதை உருவாகும் இடத்தில் உள்ள சதைகள் மற்றும் விதைகள் முழுவதையும் சாப்பிட்டுவிடும். தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு என அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒரே புழுதான். டிரைக்கோகிரம்மா கைலானிக் முட்டை ஒட்டுண்ணி பயன்படுத்துவதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். வெண்டைக்காய்ச் சாகுபடி செய்யும் இடங்களில், மக்காச்சோளம் நடவு செய்தால் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். 

வெண்டைக்காயைத் தாக்கும் மற்றொரு நோய்,இலைச் சாம்பல் நோய்’. இந்நோய்த் தாக்குதலுக்குள்ளான செடிகளின் இலைகள், வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். குளிர்காலங்களில் இந்நோய்த் தாக்குதல் இருக்கும். இதைக் கட்டுப்படுத்த திரவ வடிவ டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது சூடோமோனஸ் தெளிக்கலாம். மேலே சொன்னவை பொதுவான மேலாண்மைக்கான ஆலோசனைகள். ஆனால், நான் ஏற்கெனவே சொன்னதுபோல வேப்பெண்ணெய் கரைசலை வாரம் ஒருமுறை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பெரும்பாலான பூச்சி, நோய் தாக்குதலிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து விடலாம். வெண்டை வீட்டுத்தோட்டத்தில் இருக்க வேண்டிய பயிர். தொடர்ந்து உணவில் பயன்படுத்தி வந்தால் சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பல வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கும். இதில் உள்ள செறிவூட்டப்பட்ட நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவை பல்வேறு அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் கொண்டவை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News