25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >> இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியும், ரகுபதி ராஜா நினைவு நூலகமும், இராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்துதேசிய நூலக தினத்தை - வாசிப்பின் உன்னத விழாவாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் TEACHERS DAY CELEBRATION >> ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிட பணிகள் >> ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி  >> இராஜபாளையம் கல்வி பள்ளிகளுக்கான குறுவட்ட விளையாட்டு போட்டிகள் >> ரெயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் ராஜபாளையத்தில் தொடங்கி உள்ளனர். >> சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம் >>


சூரியகாந்தி சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சூரியகாந்தி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4,மார்டன் ஆகியசூரியகாந்தி இரகங்களும் வீரியஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை.விதையளவு : கிலோ / ஹெக்டேர்.இரகங்கள் – மானாவாரி 7, இறவை 6வீரியஒட்டு இரகங்கள் – மானாவாரி 5, இறவை 4

விதை நேர்த்தி

ஒருகிலோ விதைக்கு2 கிராம்கார்பன்டைசிம் அல்லது4 கிராம் டிரைகோடெர்மா விரிடிகொண்டு பூஞ்சாண விதைநேர்த்தி செய்யவும்.விதைப்பதற்குமுன் ஒரு ஹெக்டேருக்கானவிதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டுவிதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில்உலர வைத்து விதைக்கவும்.

விதைப்பு

ஒருகுழிக்கு இரண்டுவிதை என்ற அளவில்3 செ.மீ. ஆழத்தில்பாரின் பக்கவாட்டில் விதைக்கவும்.பின்பு10ஆம் நாள் செழிப்பாகஉள்ள ஒரு செடியைநிறுத்தி, மற்றதை களைத்துவிடவும்.பயிர்இடைவெளி: வீரிய ஒட்டுஇரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ.,  இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.

களை நிர்வாகம்

ப்ளுக்குளோரலின் விதைத்த5 ஆம்நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த3 ஆம்நாள்2 லிட்டர்/ ஹெக்டேருக்குதெளித்தபின் நீர்பாய்ச்சுதல்வேண்டும்.களைக்கொல்லிஇட்டபின் 30-35 ஆம்நாளில் ஒரு கைகளை எடுக்க வேண்டும்.  களைக்கொல்லி பயன்படுத்தாதநிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள்கை களை எடுக்கவேண்டும்.

உர நிர்வாகம்

ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம்அடியுழவில் இடவும்.இரசாயனஉரங்களில் வீரியஒட்டு இரகங்களுக்கு இறவையில்ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.இரகங்களுக்குஇறவையில் ஹெக்டேருக்கு60:30:30 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.

உயிர் உரம் இடுதல்

ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியாவை 25 கிலோதொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்துவிதைக்கு முன்இடவும்.

நுண்ணூட்ட உரம் இடுதல்

எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோமணலுடன் கலந்து விதைப்பதற்குமுன் சாலில் இடவும்.

மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்

இடைக்காலபூக்கும் பருவத்தில்மகரந்த சேர்க்கைக்காக காலை9.00 மணி முதல்11.00 மணிக்குள்கையில் மெல்லிய துணிகொண்டு பூவின் மேல்பாகத்தைஇரண்டு நாட்களுக்கு ஒருமுறைமெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும்தேய்க்க வேண்டும்.எட்டிலிருந்துபத்து நாட்களுக்கு ஐந்துமுறை இவ்வாறு செய்ய

வேண்டும். அல்லதுஅருகருகே உள்ளபூக்கொண்டைகளை ஒன்றோடுஒன்று முகம் சேர்த்துஇலேசாக தேய்க்க வேண்டும்.ஹெக்டேருக்கு,5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுவிதை பிடிப்பு அதிகரிக்கும்.  கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News