தினமும் 1 -தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்
தேன் மிகச்சிறந்த அருமருந்து என்பதால்தான், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் இந்த தேனில் ஊறவைத்து சாப்பிடப்படுகிறது.
அதிக அளவிலான வைட்டமின் C, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த நெல்லிக்காய், நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது. ஆப்பிள்களைவிட சிறந்த பண்புகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்யக்கூடியவை. ரத்தம் சுத்தமாகும்.. ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும்.
தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பட்டு வந்தால், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். நெல்லிக்காய் + தேன் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன.
கண் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை மிகவும் நல்லது.. இதனால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போகுதல், போன்றவை நீங்கிவிடும்..
கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்களுக்கு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் அற்புதமான மருந்தாகும். வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்களும் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்வதுடன், அதிகப்படியான மாதவிலக்கு உள்ளிட்ட கருப்பை சம்பந்தமான பாதிப்புகளும் நீங்கிவிடும்..
நெல்லிக்காயில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல், அஜீரணமும் நீங்கும்.. நெல்லிக்காய், தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை. மேம்படுத்த உதவும். இதனால் தோல் தொந்தரவுகள் நெருங்குவதிலலை.
, தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.. அதுமட்டுமல்லாமல் சிலருக்கு நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் அளவாகவும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது பாதுகாப்பானது
0
Leave a Reply