25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


தர்பைப் புல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தர்பைப் புல்

தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. தர்பை, குளிர்தன்மையைக் கொண்ட தாவரம். உடல், சூடு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க இது உதவுகிறது.

 அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து சுடுநீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவை உள்ள இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டுக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 

வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் தரப்பைப் புல்லைக் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் பிரச்னைகள் சரியாகும் சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த நீர் நல்ல பலன் தரும் என்கிறது ஆயுர்வேத மருத்துவம்.

நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்ற உணவு பொருட்களில் சில துண்டு தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News