பேரீச்சம்பழ அல்வா
தேவையானவை: கொட்டை இல்லாத பேரீச்சம்பழம், சர்க்கரை, நெய் தலா ஒரு கப், பால் அரை கப், பாதாம், முந்திரி, குங்குமப்பூ தேவையான அளவு.
செய்முறை: பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்து, பால் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். கடாயை சூடாக்கி, அதில் சக்கரையைப் போட்டு இளம் பாகு பதம் வந்ததும், அரைத்த பேரீச்சம்பழ விழுதைக் சேர்த்து நெய் விட்டுக் கிளறவும். இதில் பாதாம், முந்திரி, குங்குமப்பூ சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.
0
Leave a Reply