25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/ திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கைக்கு 30.09.2024 அன்று வரை  கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர்/ அருப்புக்கோட்டை/ சாத்தூர்/ திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கைக்கு 30.09.2024 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழியில் 2024-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடிச்சேர்க்கை மூலம் 31.08.2024 முடிய சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழிற்பிரிவுகளில் 100 சதவீத பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தினால் மேலும் 30.09.2024 முடிய நேரடி சேர்க்கைக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண்/பெண்) 30.09.2024-க்குள் உரிய தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள்.

வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50/-யை செலுத்தி விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள (இயந்திர வேலையாள், தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை, உட்புற வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தல் மற்றும் தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளர்) ஓராண்டு/ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேரலாம்.  

மேலும், சேர்க்கை கட்டணம் ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/- ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/- ஆகும்.  அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் /  பயிற்சியாளர் அடையாள அட்டை / அரசு பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பெறும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- மற்றும் 2024-ம் ஆண்டு ஆகஸ்ட முதல்; பயிற்சியில் சேரும் ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 /- கூடுதலாக உதவித்தொகை வழங்கப்படும்.

     விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்  (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி கைபேசி எண் விவரம்.
 
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்களான விருதுநகர்: 04562-294382 / 252655, அருப்புக்கோட்டை: 04566-225800 சாத்தூர்: 04562-290953 / திருச்சுழி: 95788-55154/ 70100-40810 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News