உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பேரீச்சம்பழம்.
உடலுக்கு தேவைப்படும் அனைத்து வைட்டமின்கள், தாது உப்புக்கள் கிடைக்க தினமும் சில பேரீச்சம்பழங்களை உட்கொள்ள டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பேரீச்சம்பழங்களின் தாயகம் என்பது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தாயகமான பெர்சியா ஆகும். தொடர்ந்து ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் இருந்து இன்று உலகம் முழுவதும் பரவியது. வெப்ப மண்டல பகுதிகளில், குறிப்பாக வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆசியாவில் அதிகம்விளைவிக்கப்படுகிறது.
வறண்ட வெப்ப மண்டல மண்ணில் விளையும் பேரீச்சம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு வலுவான ஆற்றல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. பேரீச்சம்பழத்தில் இயற்கை சர்க்கரைகளான குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்-பி6, நார்ச்சத்து போன்றவை உள்ளன. குழந்தைகளுக்கு தினமும்ஒன்றிரண்டு பேரீச்சம்பழங்கள் கொடுத்து வந்தால் சுறுசுறுப்பாகவும், நல்ல நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று ஆய்வுகள்தெரிவிக்கின்றன.
0
Leave a Reply