சேப்பங்கிழங்கை மொர மொரப்பாக பொரிக்க....
வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும்.அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உரித்த பிறகு, அதை குளிர்பதனப் பெட்டியில்2 அல்லது3 மணி நேரம் வைக்கவேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஓட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.
இனிப்புகள் தயாரிக்கும்போது பாதாம், முந்திரி போன்ற உலர்பழங்களை சீரான அளவில் சிறு துண்டுகளாக வெட்ட அவற்றை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருங்கள்.
ஒரு டம்ளரில் சூடான நீரை வைத்துக்கொண்டு, கத்தியை வெந்நீரில் தோய்த்து காய்களை வெட்டுவது போல் சாதாரணமாக நறுக்கினால் உலர்பழங்களை ஒரே அளவில் துண்டுகள் போட முடியும்
துவையல்களை அரைக்கும்போது மிளகாயைத் தவிர்த்து மிளகு சேர்த்து அரைத்து உண்டால் உடலி ல் உள்ள கொழுப்பு குறையும்.
0
Leave a Reply