25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில்ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு >> இராஜபாளையத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி >> காலை உணவுத் திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்காமல், ஆசிரியர்களை திட்டப் பணிக்கான வேலைகளை , செய்யக் கோரி துன்புறுத்துவதாக ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. >> சுற்றுச்சூழலை காக்கும் பணியில் பரியாவரன், சாயி பசுமை இயக்கம் >> இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் யானைகள் நடமாட்டம் >> ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் கிளப் >> ஆதி திராவிடர் பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேர்ந்த மாணவன். >> சிறந்த கல்லூரியாக தேர்வு பெற்ற ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி. >> ஜூவல் ஒன்,தங்கம் வைரம் பிளாட்டினம் வெள்ளி,வைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை >> குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம்.-JUNE-12 >>


ருசியான முட்டை பக்கோடா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ருசியான முட்டை பக்கோடா

தேவையான பொருட்கள் –

7 முட்டை வேகவைத்து ,3 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர் மாவு ,3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு ,1 டீஸ்பூன் கறிமசாலா தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் ,1 ஸ்பூன்  பூண்டு விழுது ,உப்பு தேவையான அளவு ,எண்ணெய் பொரிப்பதற்கு தேவையானவை

 செய்முறை - முதலில் முட்டையை கழுவி வேகவைத்து தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.  அடுத்து ஒரு பௌலில் கான்ப்ளவர் மாவு, அரிசி மாவு, கறிமசாலா தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி கொள்ளவும்.  மஞ்சள் கருவை தனியாக எடுத்து வெள்ளை கருவை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்து பகோடா மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.  பிறகு ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். 

மாலையில் டீ, காபியுடன் சாப்பிடுவதற்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக. சுட சுட முட்டை பகோடா ஒரு முறை இப்படி முட்டை சாப்பிட்டு பாருங்க, மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News