வெந்தயக் கீரை குழம்பு .
தேவையான பொருட்கள் :-
வெந்தயக் கீரை4 கட்டு,சின்னவெங்காயம்1கப், பூண்டு அரை கப், புளி எலுமிச்சை அளவு, தக்காளி4, மிளகாய்த் தூள்3 டீஸ்பூன், தனியாத்தூள்1 டீஸ்பூன், மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், உப்பு தேவைக்கு, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்.
செய்முறை: -
கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோல் நீக்கிவையுங்கள். புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வையுங்கள். எண்ணெயைக் சூடாக்கி, கடுகு, சீரகம், சோம்பு, வெந்தயம் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பூண்டு, கீரை, தக்காளி, ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, ஒன்று வதங்கியதும் மற்றொன்று எனச் சேர்த்து வதக்குங்கள். தக்காளியுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, பச்சை வாடை போனதும் புளிக் கரைசலை ஊற்றுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.சாதம், இட்லி,தோசை வகையறாக்களுக்கு மேட்சான சைடு டிஷ் இது.
0
Leave a Reply